செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கதிர்வேலு இயக்கத்தில், சசிகுமார், நிக்கி கல்ரானி, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ராஜவம்சம்’.

‘கோடியில் ஒருவன்’ படத் தயாரிப்பாளர் T.D. ராஜாவின் அடுத்த தயாரிப்பு இந்தப் படம்.

சுந்தர் . சி உதவியாளராகப் பணியாற்றியவர் கதிர்வேலு. இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில், ராதாரவி, தம்பி ராமையா, ராஜ்கபூர், விஜயகுமார், மனோபாலா, சிங்கம்புலி, நமோ நாராயணா, சாம்ஸ், நிரோஷா உள்ளிட்ட 49 நடிகர்கள், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

கடந்த மார்ச் மாதம் இப்படத்தை வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால், கொரானோ இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.

அக்டோபர் 1ம் தேதி படத்தை தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.