சசிகுமார் நடிக்கும் ‘ராஜ வம்சம்’, மார்ச் 12ல் ரிலீஸ்

21 Feb 2021

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள படம் ‘ராஜ வம்சம்’.

அறிமுகக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்க, கதாநாயகியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவண சக்தி, மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49  கலைஞர்கள்  நடித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவ இயக்குனர் சுந்தர் சி.யின் உதவியாளர்தான் இப்படத்தின் இயக்குனர் கதிர்வேலு .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ்  இசை அமைத்துள்ளார்.கலை இயக்கம் சுரேஷ், படத்தொகுப்பினை சபு  ஜோசப் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பு N .சிவகுமார், தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம்.

இப்படம் மார்ச் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: sasikumar, nikki galrani, raja vamsam,

Share via: