செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள படம் ‘ராஜ வம்சம்’. அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், சசிகுமார், நிக்கி கல்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

இப்படத்தில் படத்தில் ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவண சக்தி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49  கலைஞர்கள்  நடித்துள்ளனர் .

நவம்பர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியதாவது, 

“இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட கதையை படத்தின் இயக்குனர் கதிர்வேலு என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி டி ராஜா சார். 

ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்கு சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும். டி டி ராஜா சாருக்கு நன்றி. முதல் முறையாக நடிகர் சதீஷ் உடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.

நடிகை நிக்கி கல்ராணி பேசியதாவது,

ராஜ வம்சம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை . ஆனால் இப்படத்தில் ஒரு பெரிய வீட்டில் உண்மையாகவே ஒரு கூட்டுக் குடும்பம் போல் வாழ்ந்தது மறக்க முடியாது. நடிகர் சசிகுமார் நடிப்பின் மூலம் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தார். இயக்குனர் கதிர் சுந்தர் சி யின் உதவியாளர். மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கதிர் பிடிவாதமாக இருந்தார். அப்பொழுதுதான் இந்த கூட்டுக் குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிப்பார்கள் என எண்ணினார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் சதீஷ் பேசுகையில்,

இப்படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு நடிகர்களுடன் நடித்ததில் மிகப்பெரிய அனுபவம். படப்பிடிப்புத் தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும். இப்படத்தில் அவ்வளவு நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கதிர் அதை சிறப்பாக கையாண்டுள்ளார். கேரவன்கள்  தட்டுப்பாடு கூட ஏற்பட்டிருக்கிறது.  தயாரிப்பாளர் டி டி ராஜா சார் போன்ற பல தயாரிப்பாளர் வரவேண்டும். இந்த மாதிரியான அருமையான படங்களைத் தயாரிக்க வேண்டும்

இயக்குனர்  கதிர் பேசியதாவது,

படங்களை மக்களுக்கு விரைவில் கொண்டு போய் சேர்க்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தக் காலத்தில் உறவுகளையும் உணர்வுகளையும்  மறந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். உறவுகளை ஞாபகப்படுத்தும் படமாக இது இருக்கும் அனைத்து வயது மக்களையும் இப்படம் கவரும். 

தயாரிப்பாளர் டி டி ராஜா பேசுகையில்,

தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பம் சம்பந்தப்பட்ட நிறைய வந்துள்ளது. எப்பொழுதும் போல் சண்டை, பிரச்சனை, இறுதியில் ஒன்று சேர்வது போல் இல்லாமல் இப்படம் வித்தியாசமாக இருக்கும். இப்படம் கலகலப்பாகப் போகும். ஒரு ஜனரஞ்சகமான காமெடி திரைப்படம், எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும்.