விஜய் டிவியில் ‘ராஜா ராணி 2’ தொடர்
09 Oct 2020
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இதற்கு முன் ஒளிபரப்பான தொடர்களில் ‘ராஜா ராணி’ தொடருக்கும் தனி இடமுண்டு. அத்தொடரை ரசிகர்கள் மிகவும் ரசித்ததால் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை ‘ராஜா ராணி 2’ என எடுத்து ஒளிபரப்ப உள்ளார்கள்.
முதல் பாகத்தில் நடித்த ஆலியா மானசா இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சித்து கதாநாயகனாக நடிக்கிறார். பிரவீனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்தியா (ஆலியா மானசா) ஐ.பி.எஸ் படித்து முடித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்கிறாள். சரவணன் (சித்து) நல்ல உள்ளம் கொண்டவர், ஆனால், படிக்காதவர். குடும்ப சூழல் காரணமாக சரவணனை, சந்தியா திருமணம் செய்து கொள்கிறாள். சந்தியா படித்தவள் என்பதை சரவணன் அம்மாவிடம் (பிரவீனா) மறைத்துதான் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தனது மருமகள் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டாள் போதும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார் சரவணன் அம்மா. ஆனால், சந்தியாவிற்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் லட்சியம். இந்நிலையில் சந்தியாவின் கனவு நிறைவேற கணவன் சரவணன் ஆதரவாக இருந்தாரா, அல்லது அம்மாவிற்கு ஆதரவாக இருக்கிறாரா என்பதுதான் இத்தொடரின் கதை.
‘ராஜா ராணி 2’ வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
Tags: vijay tv, raja rani