கொரானோ நிதியுதவி - அஜித்தை பின்னுக்குத் தள்ளிய ராகவா லாரன்ஸ்

09 Apr 2020

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். 

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தவிர தங்கள் துறை சார்ந்த சினிமா சங்கங்களுக்கும் நடிகர்கள், நடிகைகள் உதவி அளித்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் இரு தினங்களுக்கு முன்பு மொத்தமாக 1.25 கோடி நிதியுதவி அளித்தார். அவருக்குப் பிறகு யார் அளிக்கப் போகிறார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பலரும் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், நடிகர் ராகவா லாரன்ஸ், அஜித்தை விடவும் இரு மடங்கு தொகையை நிதியுதவி ஆக அறிவித்து அசத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம், பெப்ஸி அமைப்புக்கு 50 லட்சம், நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம், மாற்றுத் திறனாளிகளுக்காக 25 லட்சம், அவர் பிறந்து வளர்ந்த சென்னை, ராயபுரம், தேசிய நகர் பகுதியைச் சார்ந்த ஏழைகளுக்கு 75 லட்சம் என மொத்தமாக 3 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில், அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள ‘சந்திரமுகி 2’ படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் இந்த நன்கொடையை அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். 

Tags: corono, covid 19, tamil cinema, ajith, raghava lawrence

Share via: