புஷ்பா 2 – கூடுதலாக 20 நிமிடக் காட்சிகள் இணைப்பு
07 Jan 2025
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2’. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் 1831 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இப்படத்தில் கூடுதலாக 20 நிமிடக் காட்சிகள் இணைக்கப்பட்டு ஜனவரி 11ம் தேதி முதல் திரையிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது தியேட்டர்களில் திரையிடப்பட்டு வரும் படத்தின் நீளம் 3 மணி நேரம் 20 நிமிடம். கூடுதலாக 20 நிமிடங்களை சேர்த்தால் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடும்.
ஏற்கெனவே இப்படி ஒரு திட்டத்தை தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், எப்போது அந்த கூடுதல் காட்சிகளைச் சேர்த்து திரையிடுவார்கள் என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
கூடுதல் காட்சிகளுடன் படத்தைப் பார்க்க ரசிகர்கள் மீண்டும் தியேட்டர் பக்கம் வருவார்களா ?. அப்படி வந்தால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும். 2000 கோடி வசூலைப் பெற இது ஒரு சரியான திட்டம் தான்.
Tags: pushpa 2, allu arjun, rashmika mandana