கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள “உருட்டு”, “உருட்டு” பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

வித்தியாசமான போஸ்டர்கள்,sneak peak மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது, எந்த அரசியலை பேச போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற செய்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பப்ளிக் படத்தின் முதல் பாடலான “உருட்டு”,”உருட்டு” பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பாடலாசிரியர் யுகபாரதி இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

https://youtu.be/PZ9s7DgDEjk