நடிகராகும் அடுத்த இயக்குனர் பிரபு சாலமன்
26 Feb 2021
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’.
இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . ‘மைனா, கயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். தற்போது ‘காடன்’ படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி
இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கிக் கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும் , கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
ஏற்கெனவே பல இயக்குனர்கள் நடிகர்களாக மாறி குணச்சித்திர, நகைச்சுவை, வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்கள். அவர்களது வரிசையில் தற்போது பிரபு சாலமனும் நடிகராகிறார்.
Tags: prabhu solomon
