பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

29 Jan 2021

விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘மஞ்சப் பை’.

அப்படத்தை இயக்கிய ராகவன் அடுத்து பிரபுதேவா, ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஷ்வத் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி படத்தை முடிக்க உள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ‘மாநகரம், ஜிப்ஜி, மெஹந்தி சர்க்கஸ்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் 8வது படம் இது. ரமேஷ் பி பிள்ளை வழங்க அபிஷேக், ஆதித்யா, சித்தார்த் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Tags: prabhu deva, ramya nambeesan, raghavan, d imman

Share via: