விருதிற்காக ஹாங்காங் செல்லும் 'பொன்னியின் செல்வன்' படக் குழு

11 Mar 2023


மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) 

 சிறந்த திரைப்படம், 

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),

 சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),

 சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),

 சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்

 சிறந்த ஆடை வடிவமைப்பு
 (ஏகா லக்கானி) 

ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. 

இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக லைகா ஜி.கே.எம். தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த்
ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரவி வர்மன் ஹாங்காங் சென்றுள்ளனர். 

Tags: ponniyin selvan, gk tamilkumaran, manirathnam, subashkaran

Share via: