அவ்னி டெலிமீடியா சார்பாக குஷ்பு சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி கதாநாயகனாகவும், ஜெய் வில்லனாகவும் நடிக்கும் படம் ‘பட்டாம்பூச்சி’.

பத்ரி இயக்கியுள்ள இப்படத்திற்கு நவநீத் சுந்தர் இசையமைக்கிறார். ஹனி ரோஜ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கத் துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி யும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது .