லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பன்னிக்குட்டி’.
இப்படத்தின் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா வினியோக உரிமையை தனது11:11 புரொடக்ஷன்ஸ் சார்பாக டாக்டர் பிரபு திலக் பெற்றுள்ளார்.
பட வெளியீடு குறித்து இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் கூறுகையில்,
“பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, லைக்கா புரொடக்ஷன்ஸ் உடன் எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 புரொடக்ஷன்ஸ் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக ‘பன்னி குட்டி’ திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி.
குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்குகள் சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். 11:11 புரொடக்ஷன்ஸ் எப்போதும் திரை ரசிகர்கள் இதயம் கனிந்து ரசித்து மகிழும் திரைப்படங்களை வழங்கி வருதில் மிகுந்த பெருமை கொள்கிறது. அந்த வரிசையில் ‘பன்னிகுட்டி’ திரைப்படமும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்கிறார்.
இப்படத்தில் கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு K இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதி, இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார்.
சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்