பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி

30 May 2024

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

‘பிரதர்’, ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இதில் ‘பிரதர்’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. ‘ஜீனி’ படத்தில் இன்னும் பாடல் காட்சிகள் படப்பிடிப்பு மட்டும் உள்ளது.

இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து, ‘தனி ஒருவன் 2’ படத்தில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக புதிய படமொன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தினை பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

பாண்டிராஜ் – ஜெயம் ரவி இணையும் படத்தினை சுஜாதா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் கதையொன்றை ஜெயம் ரவிக்காக உருவாக்கி இருக்கிறார் பாண்டிராஜ். இதன் படப்பிடிப்பு ஜுன் இறுதியில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

‘கோட்’ வெளியீட்டிற்குப் பின் தான் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு திட்டமிடப்படும் என்பதால், அதற்கு முன்பாக பாண்டிராஜ் படத்தினை முடிக்க திட்டமிட்டுள்ளார் ஜெயம் ரவி.

Tags: pandiraj, jayam ravi

Share via: