10 ஆண்டுகளைக் கடக்கும் ‘பையா’

02 Apr 2020

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்த படம் ‘பையா’.

2010ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி வெளிவந்த இப்படம் இன்றுடன் 10 ஆண்டுகளை முடிக்கிறது. அதற்குள் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியம்தான்.

கார்த்தி நடித்த முதல் படமான ‘பருத்தி வீரன்’ படத்திலும், இரண்டாவது படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் கிராமத்து இளைஞனாகவே நடித்தார்.

நகரத்து இளைஞனாக, மாடர்ன் ஆக நடித்தால் அவர் எப்படி இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் வெளியான படம்தான் ‘பையா’.

படத்தில் கதை என்றெல்லாம் பெரிதாகக் கிடையாது. பெங்களூலிருந்து மும்பைக்குக் காரிலேயே பயணிக்க வேண்டிய சூழ்நிலை கார்த்திக்கும், தமன்னாவுக்கும். இருவரையும் தனித் தனியாக இரண்டு கும்பல் துரத்த அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்கள், இருவரும் காதலில் விழுந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவி புரிந்தது. 

கார்த்தியை வேறு ஒரு கோணத்தில் காட்டி படம். அவர் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகம் விதைத்தது. 

ஒரு சுவாரசியமான படமாக அமைந்த இப்படம் படத்தின் இயக்குனர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, கார்த்தி, தமன்னா ஆகியோரை இப்போதும் நினைத்துப் பார்க்க வைக்கும். 

பையா படத்தின் சில பாடல்களின் வீடியோ கீழே......

Tags: paiyaa, linguswamy, yuvanshankar raja, karthi, tamannah

Share via: