ரஜினிகாந்த் பிறந்தநாளில் ‘படையப்பா’ ரிரிலீஸ்

07 Dec 2025

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்த 50 வருட பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி,  அவரது நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4 K தரத்தில் புத்தம் புது பொலிவுடன்,  மீண்டும் திரைக்கு வருகிறது.

1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் வெளியான ‘படையப்பா’ படத்தில் சிவாஜிகணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ்,  என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தனர். 

அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி.எல். தேனப்பன் பணியாற்றினார்.

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான ‘படையப்பா’ படம் அன்றைய  காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து,  இந்திய அளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன்,  புத்தம் புது பொலிவுடன்,  ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் ரிரிலீஸ் ஆகிறது.

Tags: padaiyappa, rajinikanth, ks ravikumar, ar rahman, ramya krishnan, sowndarya

Share via: