ஓ மை கடவுளே - அறிமுகமாகும் வாணி போஜன்

11 Feb 2020

ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’.

சின்னத்திரையின் நயன்தாரா என்றழைக்கப்படும் வாணி போஜன் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தன் முதல் தமிழ்த் திரைப்பட அனுபவம் பற்றி வாணி போஜன் கூறுகையில்,

“ஓ மை கடவுளே” என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான  படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். 

தெலுங்கில் ஒரு மிகப் பெரும் ஹிட் அறிமுகத்துக்குப் பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக,  எனக்கு மிகப் பெரும் வாய்ப்பாக ‘ஓ மை கடவுளே’ படம் அமைந்தது.

காதல் கதைகளுக்கென்றே எப்போதும் ஒரு வடிவம் இருக்கும். ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையைப் புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார். 

இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வின் பார்வையை மாற்றித் தரும் பெரு விருந்தாக அமையும். 

அசோக் செல்வனின் மிகச் சிறந்த,  அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு இப்படத்திற்குப் பிறகு வெகுவாக பேசப்படும். இப்படத்திற்கு பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார். 

ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும்  குடியிருக்கச் செய்யும். இப்படத்தில் ஷாரா அற்புதமான பங்கை அளித்துள்ளார். அவரது காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு இதுவரையிலான அவரது அடையாளத்தையே மாற்றிவிடும்,” என்றார் வாணி.

Tags: oh my kadavule, ashok selvan, rithika singh, vani bhojan

Share via: