100க்கும் மேற்பட்ட நாய்கள் நடித்துள்ள ‘ஓ மை டாக்’

19 Apr 2022

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சரோவ் சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய், ஆர்னவ் விஜய், விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓ மை டாக்’.

வரும் ஏப்ரல் 21ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தில் 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அது பற்றி படத்தின் இயக்குனர் சரோவ் சண்முகம் கூறியதாவது,

“நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5, 6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் பி வைத்திருந்தோம்.

இந்த கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம். டிரைனர் ராஜா, நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார், அங்கு தான் பயிற்சிகள் கொடுத்தார். படத்தில் விளையாட்டு போட்டி ஒரு பிரதானமான விஷயம், நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்கச் சொன்னேன்,” என்றார்.

அருண் விஜய் கூறுகையில்,

“இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளது. டிரைனர் ராஜவிற்கு ஒரு பெரிய நன்றி.  மேலும்  இயக்குனர் சரோவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியது எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி,” என்றார்.

Tags: oh my dog, arun vijay, arnav vijay, vijayakumar, sarov shanmugam nivas k prasanna

Share via: