தாத்தா, மகன், பேரன் நடிக்கும் ‘ஓ மை டாக்’

11 Apr 2022

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சரோவ் சண்முகம் இயக்கத்தில் நிஜ வாழ்க்கையில் மூன்று தலைமுறையாக நடிப்புக் குடும்பமாக இருக்கும் விஜயகுமார், அருண் விஜய், அர்னவ் விஜய் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஓ மை டாக்’.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 21ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது. 

தமிழ், தெலுங்கு மொழிகளில் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகும் இப்படத்தில் தாத்தா, மகன், பேரன் ஆகியோரது நெருக்கமான உறவு அனைவரையும் கவரும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மகிமா நம்பியார், வினய் ராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா மற்றும் அர்ஜூன் ஆகியோருக்கிடையே நடக்கும் உணர்வை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அர்ஜூன் சிம்பாவைக்  காப்பாற்றியதின்  மூலம் அவருக்கு சொந்தமாகவே ஆகி விடுகிறது. இந்த படம் அர்ஜூன் மற்றும் சிம்பாவின் நெருக்கடிகள் மற்றும் பல வித சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நகர்ந்து, நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் சுற்றி வலம் வருகிறது.

இப்படத்தைத் தயாரிக்கும் நடிகர் சூர்யா படம் பற்றி கூறுகையில், 

“ஓ மை டாக், ஒரு மனிதன், அவனுடைய நெருங்கிய நண்பனுக்கிடையே நடக்கும் முக்கியமான மதிப்பு, காதல், நட்பு, அன்பு ஆகியனவற்றை உள்ளத்தைத் தொடும் விதத்தில் இந்தப் படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும், முக்கியமாகக் குழந்தைகளும் சேர்ந்து கண்டு ரசிக்க வேண்டிய படம்.  உணர்வுபூர்வமான இந்தப் படம் தொலை தூரத்தில் உள்ள அனைவரையும், குழந்தைகளையும், பிரைம் வீடியோ மூலம் கோடை விடுமுறையில் மகிழ்விக்கும்," என்றார். 

அருண்விஜய்  பேசும் போது, 

"ஓ மை டாக்" படம் எனது சொந்த தொழில் மற்றும் அடையாளத்தைக் காட்டும். எனது குடும்பத்தைப் பற்றியும் பல காரணங்களுடன் தொடர்புள்ளது . இப்படத்தின் மூலம் என்னுடைய அப்பாவுடனும், என் மகன் அர்னவ்வின் அப்பாவாக நடிப்பதுடனும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. அர்னாவின் அப்பாவாக இந்த படத்தின் முக்கியத்துவம், இளம் ரசிகர்களின் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படம் உண்மையான என்டெர்டெய்னர் மட்டுமின்றி, குழந்தைகள் தம் விஸ்வாசம், அறியாமை மற்றும் பல குணாதிசயங்களை அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள மிகுந்த சான்றாக அமையும் என நான் கருதுகிறேன்," என்கிறார்.

இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில்,

"ஓ மை டாக்’ படம் உணர்ச்சிகள் ததும்பும் ஓர் உன்னதப் படம்.  குழந்தைகளாக நாம் கற்றுக் கொண்ட பாடங்களை, பெரியவர்களாக நாம் வளர்ந்துவிட்ட பிறகு, நமது பல வித பொறுப்புகளினால் மறந்துவிடுவதை அலசுகிறது. இது குழந்தைகள் தங்களின் சக்திவாய்ந்த மனோதிடத்தையும், மதிப்புகளையும் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைகிறது என்பதையும் காட்டுகிறது. விஜயகுமார் ஐயா, அருண் விஜய் மற்றும் அர்னவ் ஆகியோருடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக உள்ளது.  மூன்று தலைமுறைகள் கொண்ட அந்த நடிகர்களின் திறமையான நடிப்பினை நாம் இதில் பார்க்க முடியும்," என்றார். 

ஜோதிகா - சூர்யா தயாரிக்க, இணை தயாரிப்பாளர்களாக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ஆர்பி டாக்கீஸின் எஸ்ஆர். ரமேஷ் பாபு. இசையமைப்பு - நிவாஸ் பிரசன்னா, ஒளிப்பதிவு கோபிநாத். 

Tags: oh my dog, arun vijay, arnav vijay, vijayakumar, sarov shanmugam nivas k prasanna

Share via: