திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நிக்கி கல்ரானி

01 Feb 2021

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நிக்கி கல்ரானி. அவர் கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது.

2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ என்ற மலையாளப் படத்தில் நிவின் பாலி ஜோடியாக அறிமுகமானார்.

தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் நிக்கி.

தமிழில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.  

தென்னிந்தியத் திரையுலகில் 7 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த வேளையில் புதிய வீட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளார் நிக்கி கல்ரானி.

தற்போது ‘ராஜவம்சம், வட்டம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tags: nikki galrani, darling, kee, rajavamsam

Share via: