மெடிக்கல் த்ரில்லராக வரும் ‘குற்றம் 23’
27 Feb 2017
அறிவழகன் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘குற்றம் 23’.
‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்ததற்குப் பிறகு அருண் விஜய் நாயகனாக நடித்து வெளிவரும் படம் இது. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அருண் விஜய் நடித்துள்ள இந்தப் படம் ஒரு ‘மெடிக்கல் த்ரில்லர்’ ஆக உருவாகியுள்ளது.
அருண் விஜய், மகிமா நம்பியார் இருவரும் படத்தில் காவல் துறை அதிகாரிகளாக நடிக்கிறார்கள்.
மக்களுக்குத் தேவையான விஷயத்தை இந்தப் படத்தில் அமைத்துள்ளேன் என்கிறார் படத்தின் இயக்குனர் அறிவழகன்.
“திருமணம் முடிந்த உடனே மணமாகும் பெண்கள் சந்திக்கும் ஒரு கேள்வி ‘குழந்தை எப்போது ?, என்பதாகத்தான் இருக்கும். அதைக் கருவாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
சிறு வயதிலிருந்தே ராஜேஷ் குமாரின் நாவல்களைப் படிப்பது வழக்கம். அவரிடம் இப்படி ஒரு படம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் எழுதிய நாவல்களைப் பற்றிப் பேசினேன். அவர் கொடுத்த சில நாவல்களைக் கொடுத்தார். அதிலிருந்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து இந்த ‘குற்றம் 23’ படமாக மாற்றியுள்ளேன்.
பெண்களைப் பற்றிய ஒரு படம் அனைத்துப் பெண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமும் கூட,” என்கிறார் இயக்குனர் அறிவழகன்.
