நெல்சனிடம் ரன்வீர் சிங் பேச்சுவார்த்தை

04 Mar 2024

‘ஜெயலர்’ இயக்குநர் நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். இதில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்குப் பின் இந்தியா முழுக்கவே தெரியும் இயக்குநராக நெல்சன் மாறியுள்ளார்.

ஒரு படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றாலே, உடனடியாக முன்னணி நாயகர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்படியொரு பேச்சுவார்த்தை ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு நெல்சனுக்கு நடந்துள்ளது.

பாலிவுட் முன்னணி நாயகனான ரன்வீர் சிங் நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அடுத்து என்ன படம் எனக்கு ஏற்றவாறு கதை எதுவும் வைத்துள்ளீர்களா என்றெல்லாம் கேட்டுள்ளார். மேலும், ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தினை இயக்க தயாராகி வருகிறார் நெல்சன். அதற்குப் பிறகு பாலிவுட் படம் இயக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.

Tags: nelson dilipkumar, ranveer singh

Share via: