ஓடிடி வெளியீட்டிற்காக மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’
29 Oct 2020
கொரானோ ஊரடங்கில் ஓடிடி தளங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அமேசான், ஜீ 5 ஆகிய ஓடிடி தளங்கள் ஏற்கெனவே புதிய படங்களை நேரடியாக வெளியிட்டன.
இப்போது நெட்பிளிக்ஸ் தளமும் தமிழ் சினிமாவிலிருந்து புதிய படைப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
அந்த வரிசையில் முதல் படைப்பாக தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குனர்களில் ஒருவராக மணிரத்னம் தயாரித்துள்ள ‘நவரசா’ என்ற படத்தை வெளியிட உள்ளது. இப்படத்தை ஜெயேந்திராவும் இணைந்து தயாரித்துள்ளார்.
“கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு” ஆகிய உணர்வுகளை மையப்படுத்திய 9 குறும்படங்களை நடிகர் அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கௌதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரதீந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.
அரவிந்த்சாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சரவணன், அழகம் பெருமாள், பிரசன்னா, விக்ராந்த், சிம்ஹா, கௌதம் கார்த்திக், அசோக் செல்வன், ரோபோ சங்கர், ரமேஷ் திலக், சனன்ந்த், விது, ஸ்ரீராம் ஆகிய நடிகர்களும், ரேவதி, நித்யா மேனன், பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா ஆகிய நடிகைகளும் இப்படங்களில் நடித்துள்ளார்கள்.
ஏஆர் ரகுமான், இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹன், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.
இந்தப் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொரானோ ஊரடங்கு காரணமாக வேலையில்லாதமல் தவித்த தொழிலாளர்களுக்கு நிதியாக வழங்க இருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
Tags: navarasa, maniratnam, netflix