மலேசியாவில் சந்தோஷ் நாராயணன்

03 Feb 2023

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பின்னணி இசை, பாடல்கள், தமிழ் ஃபோக் பாடல்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதை அடுத்து, தற்போது அவர் தமிழ் இசையை உலகிற்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்ற சர்வதேச அளவிலான வெற்றி மற்றும் நீயே ஒளி பாடல் அதன் வெப்பமூட்டும் இசைக்காக ஜூனோ விருதுகள் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது. 

மார்ச் 18, 2023 அன்று மலேசியாவில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் நடைபெற உள்ள 'Sounds of the South' கான்செட் நடைபெறவிருக்கிறது.தென்னகத்தின் ஒலிகளை கேட்கும் விதமாக கச்சேரி நடைபெறவிருக்கிறது. ரெளடி பேபியில் ஆரம்பித்து ரக்கிட ரக்கிட, ஏரியா கானா, நெருப்புடா வரை, என்னடி மாயாவியில் இருந்து ஏய் சண்டக்காரா வரை பல பாடல்களும் இந்த லைவ் கான்செட்டில் இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது 

Tags: musc director, malaysia, santhosh narayanan, concert

Share via: