நவீன் பொலிஷெட்டி, அனுஷ்கா நடிக்கும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’!
03 Mar 2023
நவீன் பொலிஷெட்டி மற்றும் அனுஷ்காவின் காமெடி எண்டர்டெயினர் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ . யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபு பி இந்தப் படத்தை இயக்க, யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது.
இந்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Tags: ms shetty ,mr polishetty, naveen polishetty ,anushka shetty