மிஸ்டர் பாரத், படப்பிடிப்பு நிறைவு

19 Jul 2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, நிரஞ்சன் இயக்கத்தில், பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் பாரத்’.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. யு டியூப் பிரபலங்களான நிரஞ்சன், பாரத் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படம் பற்றிய தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், 

“இளம் குழு என்பதாலேயே இவர்களது தெளிவு, திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தியது. கதை அம்சமே எங்களை ஈர்த்தது, ஆனால் திட்டமிட்டபடி நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகச் செயலில் இருந்தனர். ஒரு தயாரிப்பாளராக, இவ்வாறு திறமையான இளைய குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.

இறுதிக்கட்டப் பணிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்த அப்டேட் வெளியாகும்.

Tags: mr bharath, niranjan, bharath

Share via: