மார்க் ஆண்டனி டீஸருக்காக விஜய்யை நேரில் சந்தித்த விஷால்!

28 Apr 2023

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும்  “மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர்  நேற்று மாலை 06:30 மணிக்கு வெளியானதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை சமீபத்தில்  "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் காண்பிக்க படக் குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே  அழைப்பு விடுத்தார்.
 
விஷால் - விஜய் சந்திப்பின் போது  "மார்க் ஆண்டனி"  திரைப்படத்தின் டீஸர் கண்டு  மகிழுந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷால் அவர்களிடம் "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று  விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விஜய்க்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள். விஷால் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார்.  
 
அதன் பின் தனது  நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை   "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம்  கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக  நடிகர் விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது  "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்"  என்று  விஜய் கூறி மேலும் உற்சாகப்படுத்தியுள்ளார். 

இச்சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் தயாரிப்பாளர் "மினி ஸ்டூடியோஸ் " வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர்  அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்

Tags: mark antony, vijay, vishal, மார்க் ஆண்டனி, விஜய், விஷால்

Share via:

Movies Released On March 06