ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’.

இப்படத்தை இயக்கிய பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு, தபு நடித்து 1996ம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படம் ‘காலாபானி’. அப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டார்.

தற்போது 25 வருடங்கள் கழித்து பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை தமிழில் வெளியிடுகிறார். 

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, MS ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார். ரோனி நபேல் இசையமைக்கிறார். RP பாலா தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். இதற்கு முன்பு மோகன்லால் நடித்து தமிழில் வெளிவந்த ‘புலி முருகன், லூசிபர்’ ஆகிய படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். 

அடுத்த மாதம் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகமெங்கும் தியேட்டர்களில் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு இப்படத்தை வெளியிடுகிறார் .