‘விஜய் 69’ அப்டேட்: மமிதா பைஜு ஒப்பந்தம்
05 Aug 2024
’விஜய் 69’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மமிதா பைஜு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘கோட்’ படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. ஆனால், அப்போது மழை அதிகமாக இருக்கும் என்பதால் நவம்பரில் தொடங்கலாமா என்று பேசி வருகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மமிதா பைஜு ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். விஜய் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
Tags: mamitha baiju, vijay