மலைகளின் இளவரசி சின்ன படம்னு நினைக்காதீங்க.. நல்ல படம்னு நினைங்க - கே ராஜன் ஆதங்கம்
11 Oct 2024
கிங் ஸ்கார்பியன் புரொடக்சன் தயாரிக்கும் படம் 'மலைகளின் இளவரசி'. இந்தப் படத்தில் புதுமுகம் விஸ்வநாத் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ராஷ்மி, பூஜா, ஷமிதா, ராகவா ஹரிகேசவா, திருமலை அழகன், முத்து லட்சுமி, ஷிவானிகா, செந்தில்குமார், ஸ்வஸ்திகா உட்பட பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை எழுதி விஸ்வநாத் டைரக்சன் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ராகவா ஹரிகேசவா. சௌமியன் இசை அமைக்க, பாடல்களை எஸ்.பி.சிவகுமார், ராகவா ஹரிகேசவா எழுதி உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல், மூணாறு மற்றும் ஈரோடு, சென்னையின் சில இடங்களில் நடந்துள்ளது.
இந்தப் படத்தின் கதை ஒரு முக்கோண காதல் கதை. அதை சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளனர். ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (09.10.2024) காலை 10. மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லேண்டன் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.
சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார். இயக்குனரும் நடிகருமான அனுமோகன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், 'சித்தா' பட வில்லன் தர்ஷன், பாடலாசிரியர் எஸ்.பி.சிவகுமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவுக்கு வந்த அனைவரையும் இயக்குனர் விஸ்வநாத் வரவேற்றார். முடிவில் ஒளிப்பதிவாளரும், வசனகர்த்தாவுமான வில்லன் நடிகர் ராகவா ஹரிகேசவா நன்றி கூறினார்.
இயக்குனரும் நடிகருமான அனு மோகன் பேசும்போது...
எவ்வளவு தைரியம் இருக்கணும் அப்போதைக்கு... இத்தனைக்கும் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக கூட ஒர்க் பண்ணல.... வந்ததும் கதை சொல்ல போறேன்.... கமலஹாசன் வீட்டு வாசல்ல போய் பத்து தடவ நிக்கிறேன்....
பதினோராவது தடவை அவருடைய மேனேஜர் டி.என்.எஸ்..... அவருடைய கார் உள்ள போகும்போது.... இந்த பையன் டெய்லி வந்து நிக்கிறான்... அந்த பையனை உள்ள கூப்பிடுன்னு கூப்பிட்டாரு.... உள்ள போனேன்... தம்பி நீங்க யாரு.... அப்படின்னு கேட்டாரு...
அப்ப என்னுடைய பெயர் மோகன்... என் திருமணத்துக்கு பிறகு தான் அனு மோகன்.... என் மனைவியோட பேரு அனு... அதனால அனுமோகன்....
கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கேன்ங்க... அப்படின்னு சொன்னேன்... எதுக்குன்னு கேட்டாரு.... கமல் சாருக்கு ஒரு கதை சொல்லலாம்னு வந்தேங்க...
ஏம்பா.... கோயம்புத்தூரில் இருந்து பகல்ல எக்ஸ்ட்ரா ஒரு ரயிலுவிட்டா எல்லாரும் கிளம்பி வந்துடுவீங்களா.... அப்படின்னு கேட்டாரு....
அப்போ கமலஹாசனை நேரில் பார்த்து கதை சொல்றதுங்கிறது அவ்வளவு ஈஸியா.... கிடையாது...
இதுக்கு முன்னாடி யார்கிட்டேயும் ஒர்க் பண்ணி இருக்கீங்களா.... அப்படின்னு கேட்டாரு...
இல்ல சார்... இப்பதான் வலம்புரி சோமநாதன் சார் கிட்ட காப்பி ரைட்டர் ஒர்க் பண்றேன்.... அப்படின்னு சொன்னேன்.
அப்பல்லாம் ஹாண்ட் ரைட்டிங் நல்லா இருந்தா... அசிஸ்டண்டா சேர்த்துக்குவாங்க... அதாவது காப்பிரைட்டரா சேர்த்துகுவாங்க....
இதைக் கேட்டதும்.... டி என் எஸ் என்ன சொல்றாரு.... முதல்ல ஒரு பத்து படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை செய்.... அதுக்கப்புறம் அஞ்சு, ஆறு படம் டைரக்ட் பண்ணு... அதுக்கப்புறம், கமல்ஹாசன் சார பாத்து கதை சொல்லணும்.... என்ன.... உடனே வந்து கமல் சாரிடம் கதை சொல்ல முடியாது.... கிளம்பு தம்பி... அப்படின்னு சொன்னாரு....
சரிங்கண்ணே அப்படின்னு திரும்பினேன்... மைண்ட்ல ஒரு சைக் ஆயிச்சு... அதாவது... சிறுவாணி லொள்ளும்பாங்க... திரும்பி அவரைப் பார்த்து.... நீங்க சொன்ன மாதிரி ஒரு பத்து படம் அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்றேன்.... நாலஞ்சு படம் டைரக்ட் பண்றேன்.... அதுக்கப்புறம் கமல் சார் தான் வந்து என்ன பாக்கணும்.... நான் பார்க்க வேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னேன்.... அதுக்கு காரணம்.... என்னுடைய தன்னம்பிக்கை.....
அதனால.... எந்த தொழில் செஞ்சாலும்.... நம்மளோட தன்னம்பிக்கை வேணும்.... அந்த தன்னம்பிக்கையோட இங்க ஒரு குரூப் சேர்ந்து படம் பண்ணி இருக்காங்க....
எல்லாருமே பிரண்ட்ஸ்ன்னு சொன்னாங்க.... கேமராமேன்.... ரைட்டர்.... மியூசிக் டைரக்டர்.... எல்லாருமே சேர்ந்து.... ஒரு குரூப்பா செயல்படீங்க.... இது அவங்களுக்குள்ள ஒரு தன்னம்பிக்கை.... அந்த தன்னம்பிக்கை மூலமாக.... ஒரு நல்ல ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்... நிச்சயமா சொல்றேன்... இந்த படம் வெற்றி பெறும்.... இந்த படத்தோட பெயர் மலைகளின் இளவரசி.... இந்த இளவரசி பட வெளியீட்டுக்கு பிறகு மகாராணியா வருவாய் என்பது நிச்சயம்...
இந்த படத்தோட பெயர் நல்ல குளிர்ச்சியான தலைப்பு... கதை சொல்லும்போது கூட.... இன்றைய மது ஒழிப்பு.... போதைக்கு அடிமையாக இருப்பதை ஒழிக்கணும்.... இதையெல்லாம் மையமாக வைத்து சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.... டைட்டில் பார்க்கும்போதும்.... பாடலை பார்க்கும் போதும்... திரைக்கதை மூலமாக நல்ல கருத்தை மக்களுக்கு சொல்றாங்க.... அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
பாம்பு புத்துல கை விட்டீங்களே சார்... அது கடிச்சுதா இல்லையான்னு சொல்லவே இல்லையே.... ரஜினி சார்கிட்ட நீங்களாவது கேட்டு தெரிஞ்சிகிட்டிங்களா... சொல்லனும் அப்படின்னு கேக்கறீங்களா....
படையப்பா படத்துல நடிக்கிறதுக்கு காரணமே வந்து திடீர் யோகம்.... அதிர்ஷ்டம்.... அப்படித்தான்....
நான் நடிச்ச முதல் படம் விஐபி... அந்த படத்துல தான் ஸ்கிரீன்ல வந்தேன்.... அந்தப் படத்தை பிரிவியூல பார்த்திருக்கிறார், ரஜினி.
நான் அந்தப் படத்துல கொங்கு தமிழ் பேசி நடித்திருந்தேன்... டவுன் சைடுல கொங்கு தமிழ் ஒரு மாதிரி இருக்கும்.... வில்லேஜ் சைடு போனா.... அங்க வேறு ஒரு மாதிரி பேசுவாங்க... வில்லேஜ்ல பேசுறவங்க அழுத்தமா பேசுவாங்க....
அந்த மாதிரி வில்லேஜ்ல அழுத்தமா பேசுற கேரக்டர்ல தான்.... நான் விஐபி படத்துல பண்ணுனேன்.... அதை ரஜினி சார் பாத்துட்டு... என்னோட அடுத்த படத்துல நீங்க நடிக்கணும்.... அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு.... அதன் பிறகு நான் அதை பத்தி நினைக்கவே இல்லை.... திடீர்னு ஒரு நாள் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் போன் பண்றாரு.... ரஜினி சார் நீங்க எப்ப பார்த்தீங்கன்னு.....
விஐபி பிரிவியூ பக்கா வந்தாரு... அப்ப பார்த்தது தான்... அதன் பிறகு பார்க்கல.... அப்படின்னு சொன்னேன்.... இல்ல நாங்க மைசூர் வந்துட்டோம்.... பத்து தடவை கேட்டார் ரஜினி சார்.... அனுமோகன் வந்துட்டாரான்னு.... அனுமமோகனுக்கு என்ன கேரக்டர்னு.....
அந்த ஸ்கிரிப்ட்ல நான் இல்லவே இல்லை.... ரஜினி சார் சொன்னதுனால.... ரவிக்குமார் சார் உடனே கூப்பிட்டார்.... நீங்களும் ஒரு ரைட்டர் டைரக்டர்..... கதையோட அவுட் லைன் சொல்றேன்.... நீங்களே ஒரு கேரக்டர் ஃபிக்ஸ் பண்ணிக்குங்கன்னு சொன்னாரு.... அப்படி நான் பிக்ஸ் பண்ண கேரக்டர் தான் அது...
முதன் முதலில் எனக்கு ஷாட் வைக்கும் போது..... இயக்குனர் ரவிக்குமார் சொன்னாரு... இவர் ஏற்கனவே பாம்பெல்லாம் புடிச்சு.... என் பேரு படையப்பா னு பாட்டெல்லாம் பாடி..... ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வர்றாரு.... நீங்க வந்து அதை பார்த்த சென்சில் கேளுங்க அப்படின்னு....
பாம்பு எல்லாம் புடிக்கிறீங்களே.... கடிக்காதா....கொத்தாதான்னு...
பக்கத்துல நின்ன ரஜினி சார்.... சொன்னாரு... நீங்க அந்த கோயம்புத்தூர் வில்லேஜ் ஸ்லாங்கில் பேசுங்க அப்படின்னு... சொன்னாரு....
அப்போ அப்படி பேசுனது அந்த டயலாக்.... ஏனுங்க அந்தப் பாம்பு புத்தில கைய விட்டீங்களே.... அது கடிச்சிடாதூங்களா.... நான் பேசி காண்பித்ததும்.... ரஜினி கேட்டு சிரிச்சாரு....
டைரக்டருக்கும்.... ஹீரோவுக்கும் அந்த வசனம் ரொம்ப புடிச்சி இருந்தது..... அதனால, நான் ஃபிக்ஸ் ஆயிட்டேன்.... சார் இந்த படத்துல எனக்கு டயலாக் எழுதாதீங்க.... சார எப்பல்லாம் பாக்குறேனோ.... அப்பல்லாம் இதே டயலாக் பேசுறேன்.... கேட்கிறேன்.... அப்படின்னு சொன்னதும் சிரிச்சிட்டாங்க....
இப்போ நீங்க கேட்டது வந்து இதோட பினிஷிங் என்னன்னு....
20 வருஷம் கழிச்சு... ரம்யா கிருஷ்ணன் வில்லி... அவங்கல பாக்குறதுக்கு ரஜினி சார் வருவாரு.... அப்பவும் நான் தான் போய் கதவ திறந்து விடுவேன்.... அப்போ கே எஸ் ரவிக்குமார் சொல்றாரு.... இங்கேயும் அந்த பாம்பு பத்தி கேளுங்க....
என்னங்க நானும் பல வருஷமா கேட்டுட்டு இருக்கேன்... இந்த பாம்பு புத்துக்குள்ள.... கைய விட்டீங்களே... அது கடிச்சிடாதுங்களா.... கேட்டேன்...
அப்போ ரஜினி சார் வந்து ரவிக்குமார் சார் கிட்ட கேக்குறாரு.... இப்ப நான் என்ன சொல்லணும்னு....
அப்ப ரவிக்குமார் சொல்றாரு.... கடிச்சது.... ஆனா விஷம் ஏறல.... அப்படின்னு சொல்லுங்க சார்....
ரஜினி சார் அந்த டயலாக் சொல்லுவாரு... பிறகு உடனே என்ன பாத்து.... அனுமோகன் நீங்க என்ன இதுக்கு பதில் சொல்லுவீங்க.... அப்படின்னு....
டேக்ல சொல்றேன் சார்.... அப்படின்னுட்டேன்...
என்ன சொல்லுவீங்க அப்படின்னு மறுபடியும் கேட்டார்....
இல்ல சார்... டேக்ல சொல்றேன் அப்படின்னு சொன்னேன்....
அது மாதிரி டேக்ல, விஷம் ஏறலைங்களா... மேல போங்க.... ஒரு பெரிய பாம்பு ஒன்னு காத்துக்கிட்டு இருக்கு....ன்னு
ஏன்னா வில்லி அவங்கதான்.... அதுதான் பினிஷிங்.... இதெல்லாம் பிளான் பண்ணாம அமைகிறது தான்.... இதே வசனத்தை ஒரு சின்ன ஹீரோ கிட்ட பேசி இருந்தேன்னா... இந்த அளவுக்கு பெருசா ரீச் ஆயிருக்காது.... சூப்பர் ஸ்டார் கூட நடிச்சதனால.... அந்த வசனம் பேசுனதுனால.... நானும் ஒரு காமெடியான ஆனேன் ...
சூப்பர் ஸ்டார் ரஜினியாலும், இயக்குனர் கே. ரவிக்குமாராலும் தான் நான் காமெடியன் ஆனேன்...
சித்தா படத்தின் வில்லன் தர்ஷன் பேசும்போது,
இயக்குனர்- கதாநாயகன் விஷ்வாவுக்கு வாழ்த்துக்கள்.... அவர் எனக்கு கதாநாயகி ராஷ்மி மூலமாக பழக்கம்.... வெரி குட் பர்சன்... படத்தோட விஷுவல் போட்டு காமிச்சாங்க.... எக்ஸலெண்ட்டா பண்ணி இருக்காங்க.... மியூசிக் டைரக்டர் சௌமியன் சார்.... சூப்பரா பண்ணி இருக்கீங்க சார்... பாடல்கள் சிறப்பா வந்திருக்கு..
இந்தப் படத்தோட கதையை பார்த்தோம்னா.... மலைகளின் இளவரசி.... அழகான ஒரு மலை சாரல் இருக்கிற இடத்தில.... அதுக்குள்ளயும் எப்படி கொடுமைகள் நடக்குது... ட்ரக்ஸ் ஆடிட்டில என்னல்லாம் கொடுமை பண்றாங்க.... அப்படிங்கிறத, அருமையா படம் புடிச்சிருக்காங்க.... பாக்கும்போது நல்ல படமா தெரியுது... ராகவா சூப்பரா ஒளிப்பதி பண்ணி... நீங்களே வில்லனா பண்ணி இருக்கீங்க.... வில்லன், பாடலாசிரியர், டயலாக் ரைட்டர் என எல்லாம் பண்ணி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்.... எல்லோரும் நல்ல முறையில் பெரிய லெவல்ல வரணும்... இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.... கதாநாயகி ராஷ்மியும் நல்லா பண்ணியிருக்காங்க... வாழ்த்துக்கள் மா....
இசையமைப்பாளர் சௌமியன் பேசும்போது,
நான் ராகவா ஹரிகேசவுடன் சேர்ந்து இரண்டு படங்கள் செய்திருக்கிறேன்... இந்த கூட்டணியில் எனக்கு இது மூன்றாவது படம்.... இந்தப் படத்தின் இரண்டு சாங் நீங்க கேட்டுட்டீங்க... இன்னொரு சாங் பார்க்க இருக்கீங்க... முதல் பாடலை சைந்தவி பாடி இருக்காங்க... இரண்டாவது பாடலை ரோஷினி பாடி இருக்காங்க.... போட்டுத் தாக்கு அப்படிங்கிற பாடல பாடுனவுங்க.... மூனாவது பாடல் ஸ்ரீநிதி பாடி இருக்காங்க... இந்த பாடல் எல்லாம் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.... இந்தப் படம் ஹிட் ஆகும்... பாடலும் ஹிட் ஆகும்.... எல்லாமும் சூப்பரா வந்திருக்கு...
கதாநாயகி ராஷ்மி பேசும்போது,
என்னுடைய கனவு படம் இந்த மலைகளின் இளவரசி. என்னை நம்பி ஒரு கதாநாயகி வாய்ப்பு கொடுத்திருக்காங்க... நன்றி இயக்குனர் சார்.... கதையை நன்றாக இயக்குனர் சொல்லி இருக்கார்... என்னை ஸ்கிரீன்ல அழகாக காண்பித்த ஒளிப்பதிவாளர் ஹரி கேசவா ஸாருக்கும் நன்றி... என்னுடைய அட்ரா சிட்டிஸ் எல்லாத்தையும் தாண்டி.... நிதானமா பொறுமையா... காட்சிகள் எடுத்தாங்க... இந்தப் படத்துக்கு ஹார்ட் பீட்டா இருப்பது மியூசிக்.... அதை இசையமைப்பாளர் சௌமியன் சார் அருமையா கொடுத்திருக்காரு.... உங்களுக்கும் என்னுடைய ஸ்பெஷல் தேங்க்ஸ்.... என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.... அவங்க கூட நடிச்சது எனக்கு ரொம்ப பிளஸ்....
இசை அமைப்பாளர் தீனா வாழ்த்தும் போது,
நான் 23 ஆண்டுகளாக ஒரு கம்ப்போசராக இருந்திருக்கிறேன். முதல் பாடல் உங்களுக்கு தெரிந்திருக்கும்... கண்ணின் மணி... கண்ணின் மணி... கதை கேளம்மா...
சித்தி தொடரின் மூலமாக அறிமுகமானேன்.... ராதிகா மேடம் என்னை அறிமுகப்படுத்தினாங்க.... நான் 23 வருஷமா சினிமாவில் இருக்கிறேன்.... அதுக்கு முன்பு 25 ஆண்டுகள் அசிஸ்டன்ட் மியூசிக் டைரக்டரா இருந்து இருக்கேன்.... ஒரு வீணை பிளேயராக இருந்திருக்கிறேன்.... நிறைய பாடல்கள்.... வேலை செய்து இருக்கிறேன்.... எனக்கு சில இசைக் கலைஞர்களை ரொம்ப பிடிக்கும்.... அதுல இசையமைப்பாளர் சௌமியன ரொம்ப பிடிக்கும்.... இவர் வந்து ஒரு சவுண்ட் இன்ஜினியர்... என்னுடைய நிறைய படங்களுக்கு வேலை செய்திருக்கிறார்....
ஒரு சில நேரங்களில் நான் போக முடியலன்னா கூட... அந்த பொறுப்பை அவரிடம் விட்டு விடுவேன்.... என்னிடம் நாலஞ்சு பேர் இருப்பாங்க.... அதுல இவர் வந்து ரொம்ப முக்கியமானவர்.... குறிப்பா எனக்கு இந்த பாடல் இப்படித்தான் வேணும்.... அப்படி பண்ணி கொடுன்னு சொன்னா .... அந்த மாதிரி பக்காவா பண்ற ஒரு இசை கலைஞன்....
இன்னைக்கு அவர் வந்து ஒரு இசையமைப்பாளரா உங்களுக்கு அறிமுகம் ஆகி இருக்காரு.... அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்... அனுபவங்கள் தான் நம் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருக்கும்.... சௌமியனுக்கு அது நிறைய இருக்கு.... படத்தோட இசை நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்லி இருக்கீங்க....படத்தின் மூலமாக நீங்க நிறைய விஷயங்களை சொல்லணும்.....
இசை பண்ணும் போது வார்த்தைகள் புரியல... இன்ஸ்மெண்ட் சத்தம் அதிகமா இருக்கு...
சமீபத்துல ராயன் படம் பார்த்தேன். ரகுமான் சார் பத்து வருஷமா தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த மாதிரி நான் ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்.... நல்ல விதமா பெரிய பெரிய படம் எல்லாம் பண்ணாரு.... ஆனால், ராயன் படத்துல பாடல் என் மனசே உருகிடுச்சு.... தனுஷ் அவர்களின் டைரக்ஷன்ல அந்த பாடல்.... அதுக்கு முக்கிய காரணம்... வார்த்தைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான்.... முக்கியமான ஒரு விஷயம்.... அது ரொம்ப கிளாரிட்டியா பண்ணி இருந்தாங்க....
எவ்வளவுதான் வளர்ச்சிகள் இருந்தாலும்.... நீங்களும் தமிழையும்.... தமிழ் பண்பாட்டையும்.... தமிழ் கலாச்சாரத்தையும்.... தமிழ் இசையையும் இசையில் கொண்டு வாங்க.... என்னதான் வெஸ்டன்ல வெஸ்டர்ன் ஃபாலோ பண்ணாலும்.... நம்முடைய தெம்மாங்கு எல்லாம் இருக்கு.... அதையெல்லாம் நீங்க கொண்டுவந்து திரையில் காட்டுங்க.... தெம்மாங்கு போட்டால்தான் வியாபாரம் ஆகும்.... கண்டிப்பா மக்கள் ரசிப்பாங்க.... அதை நீங்க புரிஞ்சுக்கணும்... உங்களுடைய கலை பயணத்தை சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...
இயக்குனரும், கதாநாயகனுமான விஸ்வநாத் பேசுகையில்,
நான் ஐடியில் வேலை செய்கிறேன்... அது என்னுடைய ப்ரொபஷனல்.... நடிக்கணும் படம் இயக்கனும் என்பது என்னுடைய கனவு.... கதாநாயகி ராஷ்மி எனக்கு பழக்கமானாங்க.... அவருடைய தந்தையார் மூலமாக கேமராமேன் ஹரி கேசவா எனக்கு அறிமுகமானார்... அவர்தான் எனக்கு முழு ஒத்துழைப்பு இந்த படத்துக்கு...
இரவு பகலாக என்னோடு இருந்து வேலை செய்திருக்கிறார். நான் என் வீட்டிலே இருந்தது கிடையாது... அதாவது வேலைக்கு ஒர்க் ஹோம் எடுத்துக் கொண்டு.... டைரக்ஷன்ல முழுமையா இறங்கினேன்....
இந்த படம் வந்து வித்தியாசமான சப்ஜெக்ட்... ஒரு பொண்ணு கொடைக்கானல் போறாங்கன்னா அவங்க என்ன மாதிரி கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கிறாங்க... அங்க என்னவெல்லாம் ப்ராப்ளம் இருக்கு.... அது பத்தின ஸ்டோரி தான்.... அதோட ஒரு முக்கோண காதலும் இருக்கிற ஸ்டோரி இது.
இசை ரொம்ப நல்லா வந்திருக்கு... நீங்களும் சப்போர்ட் பண்ணனும்...இங்க வந்திருக்க எல்லா கெஸ்டும் எனக்கு சப்போர்ட் பண்ண வந்திருக்காங்க... அவங்களுக்கு என்னுடைய நன்றிகள்....
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும், வில்லன் நடிகருமான ராகவா ஹரிகேசவா பேசும் போது...
விஷ்வா சார் ஈரோடு வந்து இருந்தாரு... கதைய சொன்னாரு... ரொம்ப புடிச்சி இருந்தது... நான் ஏற்கனவே சின்ன பட்ஜெட்டில் மூன்று படங்கள் இயக்கி இருக்கேன்.
தயவு செய்து நான் சின்ன பட்ஜெட்டில் தான் படம் பண்ணுவேன்..... பெரிய பட்ஜெட் படமா இருந்தா வேற யாராவது வச்சுக்குங்க அப்படின்னு சொல்லி இருப்பேன்... ஏன்னா நான் பாலு மகேந்திராவுடைய மாணவன்....
அவரிடம் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்.. அவர் சொன்ன ஒரு வார்த்தை.... படம் பண்ணு... பெரிய பட்ஜெட்ல பண்ணாத... தயாரிப்பாளர் கீழே விழுந்தாலும் தப்பிச்சிக்கிற மாதிரி எடுக்கணும்.... சாகடிப்பது போல் எடுத்து விடக்கூடாது.... அப்படி ஒரு விதைய என்னுடைய மனதில் விதைத்தார்... அதனால நான் சின்ன பட்ஜெட்டில் தான் படம் பண்ணுவேன்... எத்தனை படம் பண்ணினாலும் சின்ன பட்ஜெட் தான் பண்ணுவேன்....
இப்போ விஷ்வா சார் வந்ததுனால... இன்னும் நம்பிக்கை அதிகமா இருக்கு.... ஒரு டீமா அடுத்தடுத்த இன்னும் படங்கள்.... அவர் படம் ஒன்னு அடுத்ததா போக போறோம்... காந்தகா... இன்ஸ்டாகிராம்....
என்னுடைய இரண்டு படங்களும் போஸ்ட் புரோடக்சன்ல இருக்கு... சின்ன பட்ஜெட் இயக்குனராக.... முன்னணி இயக்குனராக... நிச்சயமாக வெளியே வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி...
விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே ராஜன் பேசும்போது..
இசையமைப்பாளர் சௌமியனின் 2 பாடல்கள் கேட்டேன்... ரொம்ப அருமையாக இருந்தது... ரொம்ப நல்லா இருந்தது... இப்படிப்பட்டவங்களுக்கு எல்லாம் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தமிழ் சினிமா இன்னும் நல்லா இருக்கும்...
தமிழ் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கணும்.... மியூசிக் போட்டு தமிழ் வார்த்தைகளை கொன்னுடக்கூடாது... புதியவர்களை உற்சாகப்படுத்துவது தான் நம்முடைய வேலை... அதை நான் ஒரு கடமையாக எடுத்துக் கொண்டு செய்கிறேன்...
இந்தப் பாடல் மட்டுமல்ல டிரைலரையும் பார்த்தோம்... ரொம்ப நல்லா இருந்தது... எந்த குறையும் எனக்கு தெரியல... இந்த படம் ஒரு சின்ன படமாகவே எனக்கு தெரியல...
ஒன்னு மட்டும் நான் உங்களுக்கு சொல்கிறேன்.... பெரிய படம்... சின்ன படம் என்பதை யார் நிர்ணயிப்பது... மக்கள்தான் நிர்ணயிக்கிறாங்க....
கடந்த ஆறு மாசத்துல பாத்தீங்கன்னா....
பல பெரிய படங்கள்.... 50 கோடியில 100 கோடியில் தயாரித்த படங்கள் எல்லாம் ஃபெயிலியர் ஆகியிருக்கு.... நான் குறிப்பிட்டு எந்த படத்தின் பெயரையும் சொல்லவில்லை... கம்பெனி பெயரை சொல்லவில்லை... யாரும் பாதிக்க கூடாது அப்படிங்கிறதால... ஆனா 6 கோடி ல 7 கோடியில் 5 கோடியில் எடுத்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றிப்படமா அமைஞ்சிருக்கு....
ப்ளூ ஸ்டார் அப்படின்னு ஒரு படம்.... பொம்மை நாயகின்னு ஒரு படம்.... இப்போது கருடன்... ரப்பர் பந்துன்னு படங்கள்....
லப்பர் பந்து படத்தோட.. சில பெரிய படங்கள் வந்தது... அந்தப் பெரிய படங்களை எல்லாம் ஒரு வாரத்தில் நிறுத்திவிட்டு.... லப்பர் பந்து படத்தை தியேட்டர்ல போடுறாங்க....
50 கோடி 100 கோடி படங்களை சொல்றேன்...? ஒரு ஹீரோவோட சம்பளத்தை சொல்றேன்... 15 கோடி... இன்னொரு ஹீரோவுக்கு 4 கோடி... இன்னொரு பாதர் ரோலுக்கு 3 கோடி... அப்புறம் அதை சார்ந்து இருக்கிறவங்களுக்கு சம்பளம் மட்டுமே 21 கோடி... தயாரிப்பு செலவு ஒரு 30... 40 கோடி வரும்... ஆனா, அந்தப் படத்தை ஒரு வாரத்தில் எடுக்குறாங்க....
இரண்டு வாரம் ஓடி எடுத்துட்டு.... மறுபடி இந்த பெரிய படத்த தூக்கிட்டு... இந்த சின்ன படத்தை போடுறாங்க.... ரப்பர் பந்து.... ஆச்சரியமா இருக்கு...
ஒரு வெற்றிக்கு பின்னால் இருப்பவர் டைரக்டர் தான்... அவங்க எப்படி ஒரு கதையை செலக்ட் பண்றாங்கம். அதுக்குப் பிறகு துணை நிற்பவர்கள் தான் நடிகர்கள்... டெக்னிஷன்கள்...
அதனால, இந்த சின்ன படமும்... பெரிய படமாகும்... இதை சின்ன படம் நினைக்காதீங்க.... நல்ல படம்னு நினைங்க... மக்களிடம் போன பிறகு... முதல் நாள் 50 ஆடியன்ஸ்... இரண்டாவது நாள் 100 ஆடியன்ஸ்... மூன்றாவது நாள் 150 ஆடியன்ஸ்... அப்படி ஆயிடுச்சுன்னாம்.. இது பெரிய படம்....
பெரிய படம் முதல்ல ஆயிரம் ஆடியன்ஸ்... பிறகு 500.... 300... 200.... அப்புறம் சின்ன படமாயிடும்.... இவ்வளவுதான் பெரிய படம்... சின்ன படம் என்பதற்கு இலக்கணம்.. M
போதைப் பொருள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா மூலமும் பேசப்படுகின்ற ஒரு கொடிய தீய பழக்கம்.... போராட்டங்கள் எல்லாம் நடக்குது... கேட்டா வடநாட்டிலிருந்து... ஆப்கானிஸ்தானில் இருந்து.... குஜராத்தில் இறங்கி.... அப்புறம் எல்லா மாநிலத்துக்கும் போகுதுங்கிறாங்க.... எப்படி வந்து போனாலும் தப்புதான்...
இளைஞர்கள் கெட்டுப் போறாங்க... ஒரு சமுதாயமே கெட்டுப் போகுது.... வருங்காலம் எப்படி இருக்கும்னே தெரியல.... இதையெல்லாம் தாண்டி.... நம் தாய்மார்கள் குடும்பத்தை காப்பாத்துறாங்க...
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அந்த குடும்பத்தை தாங்கி பிடிப்பவர் தாய்மார்கள்... குழந்தைகளை நல்லா படிக்க வைக்கிறது தாய்மார்கள்.... ஆண்கள் வேலைக்கு போவாங்க... அக்கறை இல்லாம இருப்பாங்க... குடிப்பாங்க... ஆனா தாய்க்குலங்கள் வீட்டை காப்பாத்துறாங்க....
சில தாய்மார்கள் குடிக்கிறாங்க... அத பார்க்கும்போது வேதனையா இருக்கு...ஒரு குடும்பத் தலைவனாக... சில குழந்தைகளின் தாத்தாவாக...
தமிழ்நாடு பண்பாடு உள்ளவங்க... எல்லாருமே மிக வேதனை படுவாங்க... அதை எல்லா வகையிலும் எல்லோரும் எதிர்க்கணும்...
இந்த படத்தின் பாடலில் பார்த்தேன்.... ஒருத்தன் குடிக்க போவான்.. அதை வாங்கி அந்தப் பெண் கொடுத்து குடித்துவிடுவாளோ என்று பயந்தேன்... ஆனால், திருப்பி அவனிடம் கொடுத்துட்டா... பெண் குடிக்கிற மாதிரி இதுல காட்டல...
பெரிய பெரிய ஹீரோக்கள் நடித்த.... போதை பொருள் படமே... பத்து படம் வந்துருச்சு.... சூப்பர் ஹீரோக்கள்... 100 கோடி 200 கோடி வாங்குபவர்கள்... போதை பொருள் படத்திலேயே நடிக்கிறாங்க.... அதனால, என்ன கெடுதல்னு சொல்றாங்கன்னு பார்த்தா... அது இல்ல...
தாக்குறேன்னு போயி... 50 பேர் அடிக்கிறது... 100 பேர் அடிக்கிறது.... கொல்றது.. டப்பு டப்புன்னு சுடுவது.... சட்ட ஒழுங்குன்னு இருக்குதான்னு தெரியல.... அதைப் பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போயி... அரிவாள எடுக்கிறான்.... ஹீரோ மாறி நாமளும் நிறைய பேர வெட்டலாம்னு நினைக்கிறான்.... இப்படி ஒரு உணர்வு உருவாக்குறிங்க.... ஏன்னா... போதை ஏறிய பிறகு.... அவன் என்ன பண்றான்னு.... அவனுக்கு தெரியல...
ஹீரோக்களை... உங்களை ஃபாலோ பண்றாங்க... அதுதான் வேதனையாக இருக்கு...
குடி போதை அந்த படத்துக்கு தேவை இருந்தா... வைங்க... அதனால், என்ன கெடுதல் நடக்குது சொல்லுங்க... மனிதன் எப்படி கெட்டுப் போறான் அப்படிங்கறத சொல்லுங்க.... இங்க போலீசு... சட்டம் இருக்கிறது என்பதெல்லாம்... எந்த படத்திலும் காட்டுவதில்லை.... சுட்டு தள்ளுறான் ஒருத்தன் 50 பேரை கொல்றான்.. ஒருத்தன் 50 பேரை சுடுறான்.... ஆனா 50 பேர் சுடுறது அவன் மேல படுறது இல்ல.... இப்படி ஒரு அற்புதமான படங்கள் எல்லாம் எடுக்குறாங்க...
ஆக இந்த படம் எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது.... நான் இந்தப் படத்தை சின்ன படம்னு நினைத்து தான் வந்தேன்.. பார்க்கும்போது எனக்கு மனம் நிறைவாக இருந்தது.... இந்தப் படம் வெற்றி பெறனும்....
நான் பெரிய படங்கள் பற்றி அதிகம் பேசுவதில்லை... பெரிய பெரிய சம்பளம் வாங்குறவங்க எல்லாம்.... அந்த பணத்தை எல்லாம் செட்டில் பண்ணிடறாங்க.... சொத்தாகிடுறாங்க... சினிமாவுக்கு திரும்ப வர்றதில்ல.... ஆனா, cஇந்த படம் ஜெயிச்சதுன்னு வச்சுக்குங்க.... இதுல வர்ற பணத்தை எல்லாம்... மறுபடியும் சினிமாவுக்கு தான் இறக்குவாங்க.. இந்த படம் எடுக்கும்போதே... அடுத்த படத்தை பத்தி பேசுறான்... அதுதான் தயாரிப்பாளர்...
பணம் திரும்பி வந்தால் மறுபடியும் படம்தான் தயாரிப்போம்.. அதனால, பல நூறு பேருக்கு வேலை கிடைக்கும்.... தொழிலாளர்களுக்கு வேலை, கலைஞர்களுக்கு வேலை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை.... இப்படி சம்பளம் கொடுப்பவர்கள் தான்.. சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள்... அதனால்தான் அவர்களை நான் வாழ்த்துகிறேன்..
இந்தப் படத்தின் பெயர் மலைகளின் இளவரசி.... அழகான தமிழ் பெயர்... இங்கிலீஷ் தேடி அலையறாங்க.... வர்ற படம் பத்து இருந்துச்சுன்னா... அதுல ஏழு படத்தின் பெயர் இங்கிலீஷ்.... தமிழுக்கு என்ன பஞ்சமா வந்துருச்சு... எவ்வளவு அழகான பெயர்கள் இருக்கு...
அழகிய தமிழில் பெயர் வைக்க வேண்டும் படங்களுக்கு.... கதைக்களம் நன்றாக இருந்தால் படங்கள் ஜெயிக்கும்... இந்தப் படம் ஜெயிக்கும்... இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகரும் டெக்னீசியனும் இசையமைப்பாளரும் எல்லாரும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசும் போது,
இந்தப் படத்தினுடைய ஒளிப்பதிவாளர் ராகவா ஹரி கேசவா... வில்லன் கம் ஒளிப்பதிவாளர்... படம் பண்ணும் போது அவரை ஒளிப்பதிவாளர் போட்டா வில்லனாகவும் பயன்படுத்திக்கலாம்... அவர் எங்க தரப்பிலிருந்து சினிமாக்கு போனவர்... இந்த நேரத்திலே இன்னொருத்தரையும் ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்...
எங்க மீடியா தரப்பில் இருந்து போய் தான் இன்னைக்கு சீனுராமசாமி இயக்குனராக இருக்கிறார். அவர். ராஜ் டிவியில் பணியாற்றியவர் தான். அவர் நிகழ்ச்சி தயாரிக்கும் போது நான் நடிச்சிருக்கேன்.
இந்த படத்தினுடைய இயக்குனர் விஷ்வா... ஐடி கம்பெனில வேலை செய்தேன்னு சொன்னாரு... ஐடி கம்பெனில வேலை செய்றவங்க நிறைய பேர் சினிமாவுக்கு வராங்க... எல்லாருமே மர்டர் த்ரில்லர் படங்கள் தான் எடுக்குறாங்க... ஒருத்தர் கூட வேற விதமா சிந்திக்கிறது இல்ல... விஷ்வா தான் இப்போது முக்கோண காதல் கதையை த்ரில்லரா எடுத்து இருக்காரு... அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... அவர் இந்த படத்துல கதாநாயகனா நடிச்சிருக்காரு... எல்லாருமே பின்னணியில் இருக்காங்க... முன்னணிலும் இருக்காங்க...
இசையமைப்பாளர் தீனா இங்க வந்து இருக்காரு... அவருக்கு இசையமைப்பாளர் சங்க தலைவராக இருந்தவர்.... அவரே தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் இசையமைப்பாளர் ரகுமான்னு சொல்லி இருக்காரு... அதுதான் கஷ்டமா இருக்கு... அவரையெல்லாம் தயவு செய்து உள்ள கொண்டு வாங்க...
அதுமட்டுமில்ல... தினாவுக்கு மறந்திருக்கும்... ஆனா நான் மறக்கல.. இசையப்பாளர் இளையராஜா வந்து இசையாமைப்பாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி தாரேன்னு சொன்னார்... ஆனா இதுவரைக்கும் கட்டி கொடுக்கல... அவர்கிட்ட கோடி கணக்கா பணம் இருக்கு... நான் என்ன சொல்றேன்... சொன்ன வாக்குகளை நிறைவேற்றனும்.... இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்திற்கு ஒரு கட்டிடம் கட்டிவச்சாருன்னா... அவர் பேர நூறு வருஷம்... 200 வருஷம் அந்த கட்டடம் சொல்லும்... பாடல்களுக்கும் மேல... வாக்குகளை கொடுத்துட்டு கம்முன்னு இருக்க கோட்டத்து. கங்கை அமரன் தான் சொன்னாரு... பிரஸ்மிட்ட நல்லா நான் கவனிச்சேன்... அதுதான் என்னுடைய கோரிக்கை.. அதாவது நீங்க சொன்னீங்க... . அதை செய்ங்க...
இன்னைக்கு பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்குது... புகழும் இருக்கு.. அவர் நினைச்சா.. ரெண்டே ரெண்டு இசை நிகழ்ச்சி நடத்தி... இசையமைப்பாளர் சங்கத்துக்கு ஒரு கட்டிடத்தை கட்டி முடிக்கலாம்.... கட்டிக் கொடுக்க முடியும்... இதற்கான ஏற்பாடுகளை தினா செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
இன்னொரு கோரிக்கை என்னன்னா... அருமை சகோதரர் கே ராஜன் இங்க இருக்காரு... உங்கள விட அவர பத்தி எனக்கு நிறைய தெரியும்.. அது அவருக்கும் தெரியும்... அவர் எப்படி பள்ளிக்கூடம் நடத்தினார்?... அவர் எப்படி குமரி ஆனந்திடம் சேர்ந்தார்... அவர் எப்படி தேர்தலில் போட்டியிட்டார்... எம்ஜிஆர் கூட கூட்டணி அமைச்சு போட்டியிட்டார்... அது வேற விஷயம்... அவருடைய போராளி தினத்தை எப்போதும் நான் பாராட்டுவேன்...
இன்னைக்கு புதுசா நிறைய புரோக்கர்கள் வந்து இருக்காங்க... அவங்க டிஸ்டிபியூட்டருக்கு பதிலா வந்திருக்காங்க... சின்ன படங்கள் எல்லாம் நாங்க ரிலீஸ் பண்ணி தர்றோம் அப்படின்னு சொல்லிட்டு... ஒரு சிலர் வர்றாங்க... பத்து தியேட்டர்... 15 தியேட்டர் புடிச்சு கொடுக்குறாங்க... அதுக்கு கமிஷன் வாங்கிடறாங்க... அதுக்கான பணத்தை சின்ன தயாரிப்பாளர்கள் வாங்கிடுறாங்க...
சின்ன பட தயாரிப்பாளர் ஒருத்தர் சொன்னாரு... இந்த புரோக்கர் கூட நாங்க நிறைய ஏமாந்துட்டோம்... இந்தப் பொறுப்பை விநியோகஸ்தர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்... ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வினியோகஸ்தர்கள் அங்கு உள்ள திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி நாங்க தான்யா விநியோகஸ்தர்கள்... எங்களுக்கு மேல வந்து ஒரு புரோக்கர்... அவன் படம் போடுறானே... எப்படி... அநியாயம்
வினியோகஸ்தர்கள் என்பவர்கள் கூடுமானவரை அந்தந்த மாவட்டங்களில் தொடர்புகளை விருத்தி செய்து தியேட்டர் அதிபர்களை உங்க பக்கம் கொண்டு வாங்க... ஒவ்வொரு வினியோகஸ்தர்கள் 30 தியேட்டர்... 40 தியேட்டர்.. உங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்தீங்கன்னா... மறுபடியும் உங்க தொழிலை புதுப்பிக்க முடியும்...
ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்க செலவு செய்ய வேண்டும்... மொத்த தியேட்டருக்கு கொண்டு போகவும் வாடகை கொடுக்க வேண்டியது இருக்கு... கியூப்பு... விளம்பரச் செலவுகள் நிறைய இருக்கு... அதை இலகுவாகுவதற்கு நீங்கள் தயாரிப்பாளரோடு கைகோர்த்து நிற்க வேண்டும்.... வினியோகஸ்தர்கள் ஒன்னு சேர்ந்தா அந்த புரோக்கர்கள் எல்லாம் இல்லாம போயிடுவாங்க... புரோக்கர்கலால்தான் இன்றைக்கு சினிமா கெட்டுப் போகுது...
இந்தப் படத்தின் பெயர் 'மலைகளின் இளவரசி'. கே ராஜன் சொன்ன மாதிரி நல்ல தமிழ்ல பெயர் வச்சிருக்காங்க... முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று அறிவித்தார்... அது மாதிரி இப்பவும் கொண்டு வர வேண்டும்... அதற்கு வந்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பெப்சி எல்லோரும் சேர்ந்து சந்தித்து பேச வேண்டும்... உறுதி எடுக்கணும்... தமிழ் படத்துக்கு தமிழ்ல பெயர் வச்சா வரி விலக்கு குடுங்கன்னு சொன்னா கண்டிப்பா செய்வாங்க...
கலைஞர் அறிவித்த போது எல்லோருமே தமிழில் பெயர் வைத்தார்கள்... இப்ப வேணும் முன்னே ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள்... வரி விலக்கு இருந்தது என்றால்.. தமிழில் கண்டிப்பாக பெயர் வைப்பாங்க... தமிழ் ஆட்சி நடத்துகிற மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின்.... துணை முதல்வர் உதயநிதி அவர்களைநேரில் சந்தித்து திரையுலகம் மூலமாக ஒரு கோரிக்கையை வையுங்கள்... டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழில் பெயர் வைத்த போது வரி விலக்கு கொடுத்தது போல... இப்போதும் செய்யுங்கள் என்று கேளுங்கள்...
அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும் தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு இல்லை... அதுக்கு காரணம் இடையில் இடைவெளி விழுந்து இருக்கிறது.... அதுதான்... வேறொன்றுமில்லை... தொலைதொடர்புக்கு அப்பால் இருக்கிற மாதிரி தமிழக அரசு இருந்து கொண்டிருக்கிறது... அப்படி இல்லன்னு நீங்க நிகழ்த்தி காட்டுங்க... முயற்சியை மூத்தவர் கே ராஜன் எடுத்துக்கணும்... இதை தயாரிப்பாளர் சங்கத்திலும் விநியோகஸ்தர் சங்கத்திலும் பேசுங்க... படம் தயாரிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை கேளுங்க... தட்டினால் தான் திறக்கப்படும்... கேட்டால் கொடுக்கப்படும்...
இந்தப் படத்தில் நடித்துள்ள விஷ்வா உட்பட அனைத்து நடிகர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
Tags: malaigalin ilavarasi, audio launch