செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மகான்’.

இப்படம் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காணலாம்.

தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கப்பட்ட ஒருவரின் கதையே ‘மகான்’. அவர் தனது லட்சியங்களை எட்டினாலும் அவரது மகன் அருகாமையில் இல்லாதது அவரை வாட்டுகிறது. கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவானாலும், ஒரு தந்தையாக வாழ வாழ்க்கை அனுமதித்ததா ?. இந்த பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இப்படத்தின் கதை. 

இந்த வெளியீடு பற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கூறுகையில்,

“மகான்’ திரைப்படத்தை பிரைம் வீடியோவில் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், டிராமா மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய உள்ளதை நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,”என்கிறார்.