சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ‘மாயோன்’. 

தமிழில் ‘மாயோன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்தப் படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தைப் பார்த்த தெலுங்கு விநியோகஸ்தர் இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் படத்தை 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். 

தமிழைப் போலவே தெலுங்கிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.