5 மொழிகளில் வெளியான சிலம்பரசனின் ‘மாநாடு’ டீசர்

03 Feb 2021

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் மாநாடு.

படத்தின் நாயகன் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தமிழில் ‘மாநாடு’ எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ‘ரீவைன்ட்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

jமிழில் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் டீசரை வெளியிட்டனர்.

முதன்முறையாக சிலம்பரசனின் பட டீசர் ஒன்று தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது அவருடைய பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு அமைந்துவிட்டது.

அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். 

டீசரைப் பார்த்த பல்வேறு சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
 

Tags: silambarasan, maanaadu, maanadu, manadu, venkat prabhu, yuvanshankar raja, simbhu, str, kalyani priyadarshan

Share via: