இளையராஜா இசையில் உருவாகும் “சஷ்டிபூர்த்தி”

31 Mar 2023

 

MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP வழங்கும் இயக்குநர் பவன் பிரபா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'சஷ்டிபூர்த்தி' புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!

MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31) சென்னை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் அழகாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள். இசை ஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் ஆர்.பி.சௌத்ரி கிளாப் போர்ட் அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்தின் இயக்குநர் பவன் பிரபா. இப்படத்தை ரூபேஷ் குமார் சௌத்ரி தயாரித்து நடித்திருக்கிறார். ஆதியின் 'கிளாப்' படத்தில் அழகாக நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்த அக்கன்ஷா சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காந்தாராவில் நடித்த அக்ஷயுத் குமார், Y.விஜயா, சுப லேகா சுதாகர் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.

சஷ்டி பூர்த்தி ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கான திரைப்படமாக இருக்கும். நாயகனும், நாயகியும் நாயகனுடைய பெற்றோரின் 60-ஆம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த எண்ணுகிறார்கள். (நாயகனுடைய பெற்றோராக ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா நடிக்கிறார்கள்). அவர்களை சுற்றி நடக்கும் சுவாரசியமான கதை தான் சஷ்டி பூர்த்தி ( சஷ்டியப்த பூர்த்தி 60-ஆம் கல்யாணம்). இப்படம் சென்டிமென்ட் மற்றும் பொழுதுபோக்கு கலந்து வலம் வரும்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி ஒரே கட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்த வருடம் 2023 ஜூலை மாதமே இப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

பேனர் : MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP
தயாரிப்பு : ரூபேஷ் குமார் சௌத்ரி
இயக்கம் : பவன் பிரபா
இசை : இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு : ரம்மி ரெட்டி
படத்தொகுப்பு : கார்த்திக் ஸ்ரீனிவாஸ்
கலை இயக்குநர் : தோட்டா தரணி
பாடல்கள் : சைதன்யா பிரசாத் மற்றும் ரெஹமான்
நடனம் : பிருந்தா
ஆடை வடிவமைப்பு : ஆயிஷா மரியம்
விளம்பர வடிவமைப்பு : அணில் பானு
மக்கள் தொடர்பு : ஜான்சன்
 

Tags: இளையராஜா, சஷ்டிபூர்த்தி, பவன் பிரபா ,

Share via: