யோகிபாபுவின் “லக்கி மேன்”
06 Feb 2023
இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு 'லக்கி மேன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள குறைவாக பேசப்படும் மக்களை பற்றியும் படம் பேசுகிறது. இதுவே படத்தின் அடிப்படை. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:
இயக்குநர்: பாலாஜி வேணுகோபால்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
இசை: சீன் ரோல்டன்,
கலை இயக்குநர் - சரவணன் வசந்த்,
படத்தொகுப்பு: ஜி.மதன்,
ஒலி வடிவமைப்பாளர்: தபஸ் நாயக்,
ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி மாறன்,
நிர்வாக தயாரிப்பாளர்: கே.மதன்,
தயாரிப்பு நிர்வாகி: வி.லட்சுமணன்,
போஸ்டர் வடிவமைப்பு: சபா டிசைன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D'One,
சமூக ஊடக விளம்பரங்கள்: பாப்கார்ன்,
தயாரிப்பு - திங்க் ஸ்டுடியோ
Tags: யோகிபாபு ,வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக்