லிங்குசாமி – ஜேசன் சஞ்சய் சந்திப்பு: நடந்தது என்ன?

23 May 2024

லிங்குசாமி மற்றும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாவதால் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும், திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து நடிகர்கள் ஒப்பந்தம் செய்யும் பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு லிங்குசாமியும், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் தனது ‘பையா 2’ கதையில் நடிக்க கேட்டிருக்கிறார் லிங்குசாமி. ஜேசன் சஞ்சய்யோ கதையைக் கூட கேட்கவில்லை.

உடனடியாக இப்போதைக்கு தனக்கு நடிக்கும் ஆசை இல்லை, இயக்குநராக வேண்டும் என்பது என் கனவு. ஒருவேளை இயக்குநராக நான் ஜெயிக்கவில்லை என்றால் நடிகராகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்காது ஏனென்றால் நான் ஜெயித்துவிடுவேன் என்று லிங்குசாமியிடம் உறுதியாகச் சொல்லியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். அவரோ வாழ்த்துகள் கூறிவிட்டு திரும்பியிருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டாலும், இன்னும் நடிகர்கள் ஒப்பந்தம் ஆகாததால் வேறு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது லைகா நிறுவனம்.

Tags: lingusamy, jason sanjay

Share via: