கமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

16 Sep 2020

‘மாநகரம், கைதி’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடுப்பட்டுள்ளதால் ‘மாஸ்டர்’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் 232வது படமாக இது உருவாக உள்ளது.

கமல்ஹாசன் ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார். இப்போது அந்தப் படங்களுக்கு முன்னதாகவே 232வது படத்தைத் தயாரித்து முடித்து 2021 கோடை விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள்.

Tags: kamalhaasan, lokesh kanagaraj, kamalhaasan 232

Share via: