‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்: பிரபாஸ்

15 Jul 2024

‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகளவில் சுமார் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்துள்லது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இதனிடையே ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் பிரபாஸ். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்ததிற்கு என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக மாபெரும் உழைப்பைக் கொடுத்து ‘கல்கி 2898 ஏடி’ படத்தினை உருவாக்கியுள்ளார் நாக் அஸ்வின். படத்திற்கு நிறைய செலவு செய்கிறார்களோ என்று அனைவருமே கவலை கொண்டோம்.

ஒரு முறை தயாரிப்பாளர் தத் சாரிடம் நிறைய பணம் செலவழிக்கிறீர்கள் என சொன்னேன். கவலைப்பட வேண்டாம், பெரிய வெற்றியைக் கொடுக்கிறோம், தரமான படத்தைத் தருகிறோம் என்று உறுதியாக சொன்னார்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஆகியோருடன் பணிபுரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள், உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். மிக அழகான தீபிகாவிற்கு மிக்க நன்றி.

’கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்”

இவ்வாறு பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: kalki, prabhas

Share via: