விளம்பர நிகழ்விலும் பிரம்மாண்டம் காட்டும் ‘கல்கி’
22 May 2024
’கல்கி’ படத்தினை விளம்பரப்படுத்த சுமார் 50 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது படக்குழு.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கல்கி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமை இப்போது ‘கல்கி’ படத்திடம் தான் உள்ளது.
இதனிடையே, ‘கல்கி’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
‘கல்கி’ படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிரத்யேக கார்கள், உடைகள் என அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது. மேலும், அனைத்து மொழியிலிருந்தும் பத்திரிகையாளர்களை ஹைதராபாத்துக்கு அழைத்துள்ளது. அதுமட்டுமன்றி பிரபாஸ் ரசிகர்கள் சுமார் 30000 பேர் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் உலகளவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இந்த நிகழ்வில் ‘கல்கி’ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
Tags: kalki, prabhas, kamal haasan, amitab bachan