அக்டோபர் 11ல் வெளியாகும் “பிளாக்”
05 Oct 2024
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது.
கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் திறமை வாய்ந்த நடிகரான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ;பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது.
பிரமிப்பூட்டும் டிரைலர் ஏற்கனவே வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் யூட்யூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நிறைய பாசிடிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு பார்வையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏற்கனவே உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.
பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் இந்தப்படத்தின் தமிழ் நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியுள்ளது.
பாலசுப்ரமணியின் மனதிற்குள் உருவான இந்த தனித்துவமான கதைக்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் அற்புதமான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் சாம் சி.எஸ்ஸின் வசீகரிக்கும் பின்னணி இசை ஆகியவை ஒன்றிணைந்து உயிரூட்டி இருக்கின்றன.
‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ என எபோதுமே வலுவான கதையை மட்டுமே நம்பி படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘பிளாக்’ திரைப்படமும் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என உறுதியாக நம்புகின்றனர்.
Tags: POTENTIAL STUDIOS,JIIVA , PRIYA BHAVANI SHANKAR,BLACK