’சர்தார் 2’ அப்டேட்: ஜெயராம் ஒப்பந்தம்

23 Jul 2024

‘சர்தார் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘பொன்னியன் செல்வன்’ படத்தில் கார்த்தியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெயராம். நீண்ட நாட்கள் அவருடன் நடித்ததால் இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றில் கார்த்தியை பற்றி ஜெயராம் உயர்வாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்தி – ஜெயராம் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். ‘சர்தார் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இருவருக்குமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

‘சர்தார் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், ஆசிஷ் ரங்கநாத் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டராக விஜய் வேலுக்குட்டி, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 

Share via:

Movies Released On February 17