உலக அளவில் பெருமை மிகுந்த திரைப்பட விருதான ஆஸ்கர் விருதில், ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான 276 திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. 

இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட  சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை வாக்களிப்பு ஜனவரி 27, 2022 வியாழன் அன்று தொடங்குகிறது. பரிந்துரைகள் முடிவு பிப்ரவரி 8, 2022 செவ்வாய் அன்று அறிவிக்கப்படும். 

விருது வழங்கும் விழா மார்ச் 27, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாலிவுட் & ஹைலேண்டில் உள்ள டால்பி®️ தியேட்டர் ஹாலிவுட் மற்றும் ஏபிசி மற்றும் உலகெங்கிலும் 200 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படம் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இது சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. 

ஆங்கிலம் அல்லாத அயல் மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022க்கான அதிகாரப்பூர்வ நுழைவையும் ‘ஜெய் பீம்’ படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஜெய் பீம்’ திரைப்படம்  90களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.  இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு மற்றும் செங்கேனி ஆகியோரின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் காவல்துறையினரால் செய்யாத குற்றத்திற்கு ராஜாகண்ணு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் சம்பவத்தால், அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. த.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.