ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி
14 Nov 2022
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
டாக்டர் ஐசரி கே கணேஷ் - ஹிப் ஹாப் தமிழா - கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: hip hop tamizha aadhi, karthick venugopal, ishari k ganesh