இறுதிக்கட்டத்தில் வெற்றி நடிக்கும் ‘இரவு’

12 Sep 2022

எம் 10 புரொடக்ஷன்ஸ் சார்பில், எம்எஸ் முருகராஜ் தயாரிப்பில் ‘பக்ரீத்’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி நாயகனாக நடிக்க, பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்க,  உருவாகி வரும் ‘இரவு’ படத்தின் படப்பிடிப்பு, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க் கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை ஈசிஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாக உள்ளது. 

படத்தின் டிரைலர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

Tags: iravu, vetri, shivani narayanan, Jegadeesan Babu, Arrol Corelli

Share via: