‘இந்தியன் 2‘ படத்தின் நேரம் 11 நிமிடங்கள் குறைப்பு

16 Jul 2024

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘இந்தியன் 2’.

இப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கலவையான விமர்சனங்களைப் பதிவிட்டனர். படத்தின் நீளம் அதிகம் என்பது பொதுவான ஒரு கருத்தாக இருந்தது.

அதைக் கருத்தில் கொண்டு தற்போது படத்தின் நீளத்தை 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைத்துள்ளார்கள். இப்போது அனைத்து தியேட்டர்களிலும் குறைக்கப்பட்ட இந்த பதிப்பைத்தான் திரையிடுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் பார்த்த பொதுவான ரசிகர்கள் குடும்பத்தினர் படத்தை ரசித்து வருகிறார்கள் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Tags: indian 2, kamalhaasan, anirudh, shankar

Share via: