இந்தியன் 2’ - நாளை இன்னும் அதிக ‘பிரேக் டவுன்’ விமர்சனங்கள் வருமா ?
08 Aug 2024
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘இந்தியன் 2’. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த வசூலையும், வரவேற்பையும் பெறவில்லை.
விமர்சகர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தது படத்தின் வசூலை பெரிதும் பாதித்தது. சமூக வலைத்தளங்களில் நிறைய ‘டிரோல்’களும் வந்தது.
இந்நிலையில் இப்படம் ஐந்து மொழிகளில் நாளை ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. ஒரு பெரிய திரைப்படம் நான்கே வாரங்களில் ஓடிடி பக்கம் வருவது ஆச்சரியமே. தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்காதவர்கள் நாளை இப்படத்தைப் பார்க்க வாய்ப்புள்ளது.
அவர்களுக்குப் படம் பிடிக்குமா, பிடிக்காதா என்பது விரைவில் தெரிந்துவிடும். அதே சமயம், ஓடிடியில் வெளிவந்த பின் ‘பிரேக் டவுன்’ விமர்சனங்களும் நிறைய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர் வெளியீட்டிலேயே சில பல குறைகளைக் கண்டுபிடித்த ரசிகர்கள், ஓடிடியில் விரும்பும் போது நிறுத்தி நிறுத்தி படத்தைப் பார்க்க முடியும். பொதுவாக டீசர், டிரைலர்களுக்கு மட்டுமே வரும் ‘பிரேக் டவுன்’ விமர்சனங்கள், இந்தப் படத்திற்காக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Tags: indian 2, kamal haasan, shankar