சொந்த ஸ்டுடியோவில் பணிகளை ஆரம்பித்த இளையராஜா
03 Feb 2021
இந்தியத் திரையுலகில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, இன்று தன்னுடைய சொந்த ஸ்டுடியோவில் இசைப் பணிகளை ஆரம்பித்தார்.
பல வருடங்களாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அவருக்கென இருந்த பிரத்யேக ஸ்டுடியோவில்தான் இதுவரையில் அவருடைய இசைப்பணிகளைச் செய்து வந்தார். கடந்த வரும் அந்த நிர்வாகத்திற்கும், இளையராஜாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பின் அந்த ஸ்டுடியோவிற்குச் செல்வதை இளையராஜா நிறுத்தினார்.
அதன்பின் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் பிரிவியூ தியேட்டரை வாங்கி அதை மாற்றம் செய்து தன்னுடைய பெயரில் ஸ்டுடியோவாக இன்று திறந்தார்.
முதலில் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ நடிக்கும் படத்திற்காக பாடலுக்கு இசையமைப்பு செய்தார். வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
தன் நண்பர் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்குச் சென்று அவரை வாழ்த்தி தாங்கள் இருவரும் இருக்கும் பெரிய புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கினார் இளையராஜா.
கோடம்பாக்கம் என்றாலே தமிழ் சினிமா என்ற அடையாளம் உண்டு. அதில் தற்போது இளையராஜா ஸ்டுடியோவும் ஒரு தனி அடையாளமாக விளங்கும்.
Tags: ilaiyaraaja, vetrimaaran, soori, vijay sethupathi