பியானோ வாசித்து பாடவும் செய்த ஹிருத்திக் ரோஷன்

06 May 2020

கொரானோவுக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக,  ‘ஐ பார் இந்தியா’ நிகழ்ச்சியில், ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் பங்கேற்றார்.

மே 3ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 85 நட்சத்திரங்கள் நேரடியாகப் பாடினார்கள். இரவு 7.30 மணிக்கு பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. 

பியானோ வாசித்து ஹிருத்திக்கும் ஒரு பாடலைப் பாடினார். ஒருவர் பியானோவையும் வாசித்துக் கொண்டு பாடலையும் பாடுவது சாதாரண விஷயமில்லை. 

அதற்காக ஹிருத்திக் 7 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்தாராம். அவர் ஒரு தொழில்முறைப் பாடகரும் அல்ல, பியானோ வாசிப்பவரும் அல்ல. ஆனாலும், அதற்காக கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டு பியானோ நோட்ஸ்களைக் கற்றுக் கொண்டு வாசித்திருக்கிறார்.

ஹிருத்திக்கின் திறமையை நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் அதை மிகவும் ரசித்திருக்கிறார்கள். நிகழ்ச்சியில் பேசிய ஹிருத்திக் அனைவரும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags: Hrithik Roshan, corona

Share via: