நார்த் அமெரிக்காவில் கோட் படத்தை வெளியிடும் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட்
03 Sep 2024
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது.
அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது.
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவினில், இப்படத்தினை அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் இப்படத்தை வெளியிடுகிறது. அட்வான்ஸ் புக்கிங் ஓபனான நிலையில் தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதானைகளை முறியடித்து வருகிறது. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தெலுங்கில் ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தினையும் ஓவர்சிஸில் வெளியிடுகிறது. RRR படத்திற்கு பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருக்கும் தேவாரா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
Tags: Hamsini Entertainment Private Limited, , Release , Vijay,G.O.A.T, North America, the UK, Europe