மெகா தயாரிப்பாளான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படம் 'ஜென்டில்மேன்2'.
    
தனது *ஜென்டில்மேன்’, படத்தின் மூலம் ஷங்கரரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இப்படி ஒரு பிரம்மாண்டமான படமான படமா என மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் கே.டி.குஞ்சுமோன். இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகப் புகழை அடையச் செய்தவர்.

இப்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஜென்டில்மேன்2’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்து அசத்தினார். மேலும் இரண்டு கதாநாயகிகளா நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் பெயரை அறிவித்தார்.

படத்தின் இயக்குனரை அறிவிக்காமல் இருப்பதால், இயக்குனர் யாராக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட வட்டாரத்திலும் சர்ச்சைகளும் யூகங்களுமாக சஸ்பென்ஸ் தொடர்ந்தது . தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இயக்குனர் பெயரை அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன். 

நானி கதாநாயகனாக நடித்த வெற்றி படமான ‘ஆஹா கல்யாணம்’ படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா ‘ஜென்டில்மேன் 2’ படத்தை இயக்க உள்ளார். 

இயக்குனர் கோகுல் கிருஷ்ணா ஏற்கனவே பிரபல டைரக்டர் விஷ்ணு வர்தனிடம்  ‘பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவசாலி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

படத்தின் ஹீரோ, மற்றும் தொழி்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளையும் உடனே எதிர்பார்க்கலாம் என்று தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்தார்.