ஸ்ரேயா நடிக்கும் ‘கமனம்’
11 Sep 2020
தமிழில் ‘சிவாஜி, அழகிய தமிழ்கமன், திருவிளையாடல் ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரேயா நடித்துள்ள படம் ‘கமனம்’.
சுஜனா ராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ரேயா.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை ஸ்ரேயாவின் பிறந்தநாளான இன்று தெலுங்கு இயக்குனர் கிரிஷ் வெளியிட்டுள்ளார்.
இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.
ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.
படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
Tags: gamanam, shreya, shriya, ilaiyaraaja